Topic : Eternal life

நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன். அவைகள் என்றென்றைக்குஞ் சேதமாய்ப் போவது மில்லை, என் கைகளினின்று அவை களை ஒருவனும் பறித்துக்கொள்ளுவது மில்லை. (உபாக. 32:39.)
என் பிதாவினால் எனக்குக் கொடுக்கப்பட்டது சர்வத்திலும் மேன்மையானதாய் இருக்கின்றது. என் பிதாவின் கையினின்று அதைப் பறித்துக் கொள்ள ஒருவனாலுங் கூடாது.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (அரு. 8:19; 12:45; 14:9.)

John 10:28-30

என்னைக் கண்டுபிடித்திருப் பவனெவனோ அவன் சீவியத்தைக் கண்டுபிடிப்பான்; ஆண்டவரிடத்தில் இரட்சிப்பையும் பெற்றுக்கொள் வான்.

Proverbs 8:35

கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார்.

1 Peter 5:10

ஆயினும் உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம். தெய்வ சித்தத்தை நிறைவேற்றுகிறவனோ என்றென்றைக்கும் நிலைநிற்பான்.

1 John 2:17

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசு வாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9; உரோ. 5:8.)

John 3:16

நாங்கள் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவை; காணப்படாதவை களோ நித்தியமானவை.

2 Corinthians 4:18

ஏனெனில் இம்மையில் இலகுவாயும் ஒரு நொடிப்பொழுதுக்குமாத் திரமிருக்கிற நமது துன்பமானது நித்திய கனத்தையுடைய மகிமைப்பிரதாப மகத்துவத்தை அளவின்றிப் பெறுவிக்கும். (உரோ. 8:18.)

2 Corinthians 4:17

தேவசுதனுடைய நாமத்தை விசுவசிக்கிற நீங்கள் நித்திய ஜீவியத்தைக் கொண்டிருக்கிறீர்களென்று அறியும்படிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். (அரு. 1:12; 20:31.)

1 John 5:13


எப்படியெனில் பாவத்துக்குக் கூலி மரணமாம். சர்வேசுரனுடைய வரப்பிரசாதமோ நம்முடைய ஆண்டவராகிய கிறீஸ்து சேசுநாதராலே நித்திய சீவியமாயிருக்கின்றது. *** 23. இந்த அதிகாரத்தில் அர்ச். சின்னப்பர் ஞானஸ்நானத்தின் மேன்மையையும், அதி லடங்கிய அதிசயத்துக்குரிய பிரயோசனத்தையும், பேறுபலன்களையும் மிகவுந் துலக்க மாகவுஞ் சிறந்த மேரையாகவுங் காட்டுகிறார். அதாவது: சேசுநாதர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததுபோல, நாமும் ஞானஸ்நானம் பெறுகிறபோது பாவத்துக்கும், உலகத்துக்கும், ஆசாபாசத்துக்கும் மரிக்கிறோம். சேசுநாத ருடைய திருச்சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது போல, நாமும் ஞானஸ்நானத்தினாலே பாவத்திலும் உலகத்திலும் நின்று பிரிக்கப்பட்டு, மறைக்கப்படுகிறோம். சேசுநாதர் மூன்றாம் நாள் புது உயிரடைந்து உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் ஞானஸ்நானத்தில் புது உயிர் அடைந்து உயிர்க்கிறோம். சேசுநாதர் தம்முடைய மரணத்தினால் நம்முடைய பாவங்களுக்காகப் பிதாவின் நீதிக்கு உத்தரித்து, நமக்குப் பெறுவித்த பாவப்பொறுத்தலை ஞானஸ்நானத்தினால் சம்பூரணமாய் அடைகிறோம். சேசுநாதருடைய திருச் சரீரம் அடக்கபண்ணப்பட்டதினால், நாம் உலகத்துக்கு மறைந்தவர்களாய் அந்தரங்க சீவியமாய் நடக்க வரப்பிரசாதம் அடைகிறோம். சேசுநாதருடைய உத்தானத்தால், புது உயிராகிய இஷ்டப்பிரசாத சீவியமாய் நடக்கப் பேறு பெற்றவர்களாகிறோம். அப்படியே சேசுநாதர் ஒருவிசை மரித்து, மரணத்தை ஜெயித்தபின் இனி என்றென்றைக்கும் மரிக்கமாட்ட ரென்கிறதுபோல, ஞானஸ்நானம் பெற்ற நாமும் ஒருவிசை சேசுநாதருக்குள் பாவத்துக்கு மரித்து, இஷ்டப்பிரசாதமாகிய ஞான சீவியத்துக்கு உயிர்த்தபிறகு, இனிப் பாவத்தால் மரிக்காதிருக்கக்கடவோம். இப்படியே ஞானஸ்நானத்தினால் நித்திய பிதாவின் புத்திரராகவும், சேசுக்கிறீஸ்து நாதருடைய திருச் சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் நம்முடைய சரீரமும் ஆத்துமமும் ஒன்றிப்பதால், இஸ்பிரீத்துசாந்துவுக்கு ஆலயமாகவும் இருக்கும்படி, சேசுக்கிறீஸ்து நாதரால் பேறுபெற்றவர்களாகி, அவருடைய ஊழியத்துக்கு நம்மை முழுவதும் வலிய மனதோடு ஒப்புக்கொடுத்திருக்கிறதினால், இனி நாம் ஒருபோதும் பாவத்துக்குட்படாமல், சேசுநாதருடைய உயிர்த்த சீவியத்துக்கு ஒப்பாய் நடக்கக்கடவோம். ஏனெனில் பாவத்தின் கூலி மரணமும், அதன் முடிவு நித்திய நரகாக்கினையும், ஞான சீவியத்தின் முடிவு சததமான சீவியமும், அதன் சம்பாவனை நித்திய மோட்சமும் என்று போதிக்கிறார்.

Romans 6:23

சுதனை விசுவசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியமுண்டு. ஆனால் சுதன் பேரில் அவிசுவாசமாயிருக்கிறவன் ஜீவியத்தைக் காணாதிருப்பதுந்தவிர தேவகோபமும் அவன்மேல் நிலை நிற்கும் என்றார். (1 அரு. 5:10.)

John 3:36

நெருக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். ஏனென்றால் கேட்டுக்குச் செல்லும் வாசல் அகன்றதும் அதன்வழி விசாலமுமாயிருக்கின்றது. அதில் பிரவேசிக்கிறவர்களும் அநேகர். (லூக். 13:24.)
சீவியத்துக்குச் செல்லும் வாசல் எவ்வளவோ நெருக்கமும் அதன் வழி எவ்வளவோ ஒடுக்கமுமாயிருக்கின்றது! அதைக் கண்டுபிடிக்கிறவர்களும் சொற்பப்பேர்.

Matthew 7:13-14

ஏக மெய்யான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய சேசுக்கிறீஸ்துவையும் அவர்கள் அறிந்து கொள்வதே நித்திய ஜீவியம்.

John 17:3

விசுவாசத்தின் நல்ல போர் பொருதுவீராக; நித்திய ஜீவியத்தைக் கைப்பற்றிக்கொள்ளும். இதற்காக வே நீர் அழைக்கப்பட்டீர். இதைப் பற்றியே அநேக சாட்சிகளுக்கு முன் பாக விசுவாசத்தின் நல்லறிக்கையிட் டிருக்கிறீர்.

1 Timothy 6:12

அப்போது சிங்காசனத்திலிருந்து ஒரு பெரிய குரல் சத்தம் உண்டாகி: இதோ, மனிதரோடு சர்வேசுரன் வசிக்கும் ஸ்தலம். அவர்களோடு அவர் வாசம்பண்ணுவார்; அவர்களும் அவ ருடைய ஜனங்களாயிருப்பார்கள். சர்வே சுரன்தாமே அவர்களுடைய தெய்வ மாக அவர்களோடேகூட இருப்பார்.
சர்வேசுரன் அவர்களுடைய கண் களினின்று கண்ணீர் யாவையும் துடைப் பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக்கேட்டேன். (காட்சி. 7:17; இசை. 25:8.)

Revelation 21:3-4

ஆனால் நான் அவனுக்குக் கொ டுக்கும் ஜலம் அவனிடத்தில் நித்திய ஜீவியத்துக்குப் பாய்கிற நீருற்றாகும் என்றார்.

John 4:14

ஆகிலும் இக்காலத்தின் துன்ப துரிதங்கள் இனி நம்மிடத்தில் வெளிப் படப்போகிற மகிமைக்குச் சரிதகைமை யானதல்ல என்று எண்ணுகிறேன்.

Romans 8:18

தன் ஜீவனைக் கண்டடைகிற வன் எவனும் அதை இழப்பான்; என் னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். (மத். 16:25; லூக். 17:33; அரு.12:25.) * 39. தன் உயிர் பிழைக்கும்படி தேவ கற்பனையை மீறி நடக்கிறவன் நரகத்தில் நித்தியகாலம் செத்தும் சாகாமல் வேதனைப்படுவானாமே.

Matthew 10:39

நானே அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமும் என்று ஆண்டவராகிய கடவுள் சொல்லுகிறார். இவரே இருக்கிறவர், இருந்தவர், இனி வரப்போகிறவர், சர்வ வல்லபமுள்ளவர். (இசை. 41:4; 44:6; காட்சி. 21:6; 22:13.) *** 8. இந்த ஆகமம் அர்ச். அருளப்பரால் எழுதப்பட்ட கிரேக்க பாஷையில் அல்பா என்பது முதல் எழுத்தும், ஓமேகா என்பது கடைசி எழுத்துமாயிருக்கின்றது. ஆகையால் சர்வேசுரன் நாமே, அல்பா ஓமேகா என்று சொல்லும்போது எல்லாத்துக்கும் ஆதிகாரணமும் முடிவும் கதியும் நாமே என்று சொல்லுகிறாரென்று அறியவும்.

Revelation 1:8

ஆனாலும் நித்திய ஜீவியத்தை அடையும்பொருட்டு இனிக் கிறீஸ்து சேசுநாதரை விசுவசிப்பவர்களுக்கு மாதிரி யுண்டாயிருக்கும்படியாக முந்தின (பாவி யாகிய) என்னிடத்தில் அவர் எவ்வித பொறுமையையும் காண்பிக்கச் சித்தமானதால் (நான் இரக்கமடைந்தேன்).

1 Timothy 1:16


மனுஷன் எதை விதைத்திருப்பானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்தில் விதைக்கிறவன் மாம்சத்திலிருந்து அழிவை அறுப்பான். ஞானத்தில் விதைக்கிறவன் ஞானத்திலிருந்து நித்திய ஜீவியத்தை அறுப்பான்.

Galatians 6:8

இந்த அதிகாரத்தின் அபிப்பிராயத்தைக் தொகுத்துக் காட்டுந் தன்மை யாவது: மனுஷன் சேசுக்கிறீஸ்துநாதரைப்பற்றிய விசுவாசத்தினாலே இலவசமாய் நீதிமானாக்கப்படுகிறானென்று மூன்றாம், நாலாம் அதிகாரங்களில் அர்ச். சின்னப்பர் போதித்தபிறகு அப்படிப்பட்ட நீதியின் மேன்மையையும் பிரயோஜனத்தையும் இதிலே காட்டுகிறார். 1-வது, நம்முடைய இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பேறுபலன்களினாலே சர்வேசுரனோடு சமாதானமாய்ப் போகிறோம். 2-வது, நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாகிறதுந்தவிர, அவர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் நித்திய பாக்கியத்தை அடைவோமென்றும் நம்பிக்கையாயிருக்கிறோம். 3-வது, கஸ்தி துன்பங்கள் அந்தப் பாக்கியத்துக்கு வழியாயிருப்பதால், அவைகளிலே சந்தோஷப்படுகிறோம். 4-வது, அந்த நம்பிக்கையின் முகாந்தரமேதென்றால், நாம் இன்னும் பாவிகளாயிருக்கையிலே சேசுக்கிறீஸ்துநாதர் நமக்காகப் பாடுபட்டு மரித்திருக்க, அவருடைய திரு இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டபிறகு, எவ்வளவோ அதிகமாய்த் தேவ கோபாக்கினையினின்று நம்மை இரட்சித்து, நித்திய சீவியத்தைக் கொடுப்பாரென்பதாம். 5-வது, சேசுக்கிறீஸ்நாதராலே நமக்குப் பெறுவிக்கப்பட்ட நீதியின் அவசரத்தையும், மேன்மையையுங் காண்பிக்கத்தக்கதாக நம்முடைய கேட்டுக்குக் காரணமாயிருந்த ஆதாமையும், நம்முடைய இரட்சணியத்துக்குக் காரணமாயிருந்த சேசுக்கிறீஸ்துநாதரையும் ஒருவர்க்கொருவரை எதிராகக் காண்பித்து, முந்தின ஆதாம் எல்லா மனிதருடைய கேட்டுக்குக் காரணமாயிருந்ததுபோல, இரண்டாம் ஆதாமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் எல்லா மனிதருடைய இரட்சணியத்துக்குங் காரணமாயிருக்கிறார் என்கிறார். பின்னும் முந்தின ஆதாமுக்கும் 2-ம் ஆதாமாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கும் உள்ள வேற்றுமைகளைத் தொகுத்துக் காட்டி, ஆதாம் ஒரே பாவத்தை நமக்குக் கொடுத்திருக்க, சேசுக்கிறீஸ்துநாதர் அந்த ஜென்மப்பாவத்தினின்றுமாத்திரமல்ல, சகலமான பாவங்களினின்றும் நம்மை இரட்சித்தாரென்றும், ஆதாம் தனது பாவத்தால் நம்மிடத்தில் ஜென்ம நீதியை அழித்துப்போட்டிருக்க, சேசுக்கிறீஸ்துநாதர் அந்த ஜென்ம நீதியிலும் மிகவும் மேன்மையான நீதியையும், சகலமான நன்மைகளையும் நமக்குப் பெறுவித்தாரென்றும் விஸ்தரித்துக் காண்பிக்கிறார். அப்படியிருக்க, ஆதித்தகப்பனால் உண்டாக்கப்பட்ட ஜென்ம நீதியின் அந்தஸ்தைப் பார்க்கிலும், சேசுக்கிறீஸ்துநாதராலே இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கிற நம்முடைய அந்தஸ்து அதிக மேன்மையாயிருக்

Romans 5:21

ஆகையால் இவர் நமக்காக மனுப்பேசுவதற்கு எப்போதும் ஜீவிய ராயிருந்து, தமது மூலமாய்ச் சர்வே சுரனிடத்தில் அண்டிவருகிறவர்களை என்றென்றைக்கும் இரட்சிக்க வல்ல வராயிருக்கிறார்.

Hebrews 7:25

அழிந்துபோகிற போஜனத்துக் காக அல்ல, நித்திய ஜீவியத்திற்காக நிலை நிற்கிற போஜனத்துக்காகவே பிரயாசப் படுங்கள்; மனுமகன் அதை உங்களுக்குத் தந்தருள்வார். ஏனெனில் பிதாவாகிய சர் வேசுரன் அவரையே முத்திரித்திருக்கி றார் என்றார். (மத். 3:17; 17:5; அரு. 1:32.) * 27. இராஜாவினால் அனுப்பப்பட்ட ஸ்தானாபதியினாலும், யாதோர் கற்பனை கட்டளையினாலும் இராஜமுத்திரையால் நிச்சயிக்கப்படுவதுபோல, சேசுநாதர் தாம் பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்டவரென்று தேவமுத்திரையாகிய தெய்வீகவல்லமை அற்புதங்களைக்கொண்டு தம்மை உலகத்துக்கு நிச்சயப்படுத்துகிறார் என்றறியவும்.

John 6:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |